அன்பு நண்பர்களே!,
வணக்கம்! எத்தனையோ வலைப்பூக்கள் இருக்க, இப்போது ஏன் இந்த புதிய வலைப்பூ என்ற எண்ணம் எழும். எந்திரமயமான வாழ்க்கை என்னை இந்த வலைப்பூவை உருவாக்கத் தூண்டியது!.
இந்த வலைப்பூவினை பின் தொடர்ந்தால் நீங்கள் கட்டாயம்,
1. அகில இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெறலாம்
2. எந்த போட்டித் தேர்விலும் நீங்கள் சிறப்பிடம் பெறலாம்
3. குறைந்தது ஒருவருடத்திற்குள் உங்களுக்கு அரசு வேலை நிச்சயம்
4. தங்களின் தற்போதைய துன்பங்கள் தீரும்..
என்றெல்லாம் உங்கள் காதுகளில் இந்த வலைப்'பூ' வைக்க விரும்பவில்லை.
இங்கு எழுத எந்த வரைமுறையும் இல்லை!..
மனதிற்கு பிடித்ததை; மனதில் நெருடுவதை; மனதில் தோன்றுவதை; புதிய சிந்தனைகளை அப்படியே கொட்டலாம்!
குறிப்பாக தேர்விற்குத் தயாராக உள்ள நண்பர்களும் தங்கள் தயாரிப்புகளை இங்கே அளிக்கலாம்.
வாருங்கள் அரட்டை அடிப்போம்! உபயோகமாக!
அன்புடன்
மகிழினி
